செய்திகள் உண்மை உடனுக்குடன்

பாலியல் வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் கைது

Untitled design(3)

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த உத்தரபிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டார்.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த காயத்ரி பிரஜாபதி மீது தேர்தலுக்கு முன்னரே பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர். ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த காயத்ரி பிரஜாபதியை லக்னோவில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட காயத்ரி பிரஜாபதி தோல்வி அடைந்தார்.