செய்திகள் உண்மை உடனுக்குடன்

குழந்தைக்குப் பால் கேட்டு ட்வீட் செய்த பயணி: உடனே ஏற்பாடு செய்த ரயில்வே

Railway

ஐந்து மாத குழந்தைக்கு பால் வேண்டும் என ஹப்பா எக்ஸ்பிரஸ் பயணி ஒருவர் ட்விட்டரில் கொங்கன் ரயில்வேக்கு ட்விட் செய்தார். இதையடுத்து, அந்த குழந்தைக்கு உடனடியாக பால் எற்பாடு செய்து கொடுத்துள்ளனர் ரயல்வே அதிகாரிகள்.

மார்ச் 12-ம் தேதி, ஹப்பா எக்ஸ்பிரஸில் பயணித்த ஒருவர் தனது ஐந்து வயது குழந்தைக்கு பால் வேண்டும் என கொங்கன் ரயில்வேக்கு ட்விட் செய்தார். அந்த பயணியிடம் இருந்து அனைத்து தகவலையும் வாங்கிய ரயில்வே, 40 நிமிடங்களில் மகாராஷ்டிராவில் உள்ள கொலத் ரயில் நிலையத்தில் பால் ஏற்பாடு கொடுத்துள்ளனர். ரயில்வேயின் துரிதமான செயல்பாடு பயணிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் ட்விட்டர் மூலம் தன் குறைகளை சொல்லும் ஒரு பயணிக்கு உதவி செய்வது இது முதல்முறை அல்ல. ஏப்ரல் 2016-ல் அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸில் பயணித்த ஒரு ஜோடி, தங்களை 20 இளைஞர்கள் தொந்தரவு செய்கின்றனர் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு ட்விட் செய்தனர். இதையடுத்து, தன்பாத் ரயில்வே நிலையத்தில் அவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 பேர் தப்பித்துச் சென்று விட்டனர்.