மக்கள் தீர்ப்பை திருடிய பாஜக: ராகுல்காந்தி

Rahul

மணிப்பூர் மற்றும் கோவா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாரதிய ஜனதா திருடிவிட்டதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

பஞ்சாபில் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்‌கிரஸ் அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க சண்டிகர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூரிலும், கோவாவிலும் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா கட்சி பணப‌லத்தை பயன்படுத்தியதாக காங்கிரஸ் துணைத் ‌ குற்றம்சாட்டினார்.

மணிப்பூர் மற்றும் கோவா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாரதிய ஜனதா திருடிவிட்டதாகவும் அ‌வர் சாடினார். பஞ்சாபில் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியில் அ‌மரவைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநில மக்களின் நலனுக்காக காங்கி‌ரஸ் ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடும் என்றும் ‌ராகுல்கா‌ந்தி ‌கூறினார்.