கோவா காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

கோவா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜீத் ரானா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இது தொடர்பான கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் அவர் அளித்தார். ஆனால், பதவி விலகும் முடிவை திரும்பப் பெறுமாறு ரானேவை சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.