உத்தரகாண்ட்டில் யார் முதலமைச்சர்?

Uttarakhand assembly

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அரசு, நாளை பதவியேற்கிறது. எனினும், முதலமைச்சர் தேர்வு குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை.

அண்மையில் நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57-ல் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. புதிய அரசு நாளை பதவியேற்கிறது. இருப்பினும் யார் முதலமைச்சர் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதனிடையே, டேராடூனில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். நாளை புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அஜய் பட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவிக்கான பட்டியலில் 6 பேர் இருக்கின்றனர். இவர்களில் பிரகாஷ் பாண்ட், திரிவேந்த்ர சிங் ராவத் ஆகியோரிடையே கடும் போட்டி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவரை பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.