உத்தராகண்ட் முதல்வராகிறார் திரிவேந்திர சிங் ராவத்

700x350 trs

உத்தராகண்ட் முதலமைச்சராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57-ல் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. புதிய அரசு நாளை பதவியேற்கிறது. இருப்பினும் யார் முதலமைச்சர் என்பது குறித்து முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் உத்தராகண்ட் மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் டேராடூனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பிரகாஷ் பன்ட், திரிவேந்த்ர சிங் ராவத், சத்பால் மகராஜ் ஆகியோர் பெயர் பேசப்பட்டது.