செய்திகள் உண்மை உடனுக்குடன்

பீகாரில் பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பீகாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பீகார் ஐஎஸ் இயக்கப் பிரிவில் இணைய வாருங்கள் இளைஞர்களே என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என தேடி வருகின்றனர். உள்துறை அமைச்சகத்துக்கும் இது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.