செய்திகள் உண்மை உடனுக்குடன்

நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்ட ஜாட் இனத்தவர்

இட ஒதுக்கீடு கோரி நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜாட் இனத்தவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஹரியானா மாநில அரசுடன் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜாட் அமைப்பினர் இதனை தெரிவித்தனர். ஜாட் அமைப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை மாநில அரசும், மத்திய அரசும் விரைவில் தொடங்கும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உறுதியளித்துள்ளார். இடஒதுக்கீடு கோரி வரும் ஜாட் அமைப்பினர், டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.