செய்திகள் உண்மை உடனுக்குடன்

இவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்பும்!

Child l

உலக மனநலிவு நோய் (டவுன் சின்ட்ரோம்) மார்ச் 21-ஆம் தேதி அதாவது இன்று கடைபிடிக்கப்படுகிறது. நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

டவுன் சின்ட்ரோம்’ என்பது ஒரு குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறு. இது மரபணு கோளாறால் ஏற்படுகிறது. டவுன் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி, மற்ற குழந்தைகளை விட குறைவாகவே இருக்கும். இந்தக் குழந்தைக்கு தவழ்வது, உட்கருவது போன்றவற்றைச் செய்ய மற்ற குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிக காலம் எடுத்துக்கொள்வர். பிறக்கும் குழந்தைகளில் 1000 அல்லது 1100-ல் ஒன்று மனநலிவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

பிறக்கும்போதே இக்குழந்தைகளின் எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறிதாக இருக்கும். குழந்தை கருவில் இருக்கும்போது, தாயிடம் மேற்கொள்ளப்படும் சில பரிசோதனைகள் மூலம், மன நலிவுடன் குழந்தைப் பிறப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

முன்னர் இந்நோய் உள்ளவர்கள் நீண்ட காலம் வாழ முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்நிலை மாறிவிட்டது. கர்ப்பிணிகள் சோதனை மூலம் நோயைக் கண்டறிந்து அதற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். குணப்படுத்தும் சிகிச்சை இல்லையென்றாலும், மருத்துவ வளர்ச்சியின் காரணமாக, இந்நோய் கொண்ட குழந்தைகளுக்குத் தகுந்த மருத்துவக் கண்காணிப்பை அளிக்க முடியும்.

மன நலிவுக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம். அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கம் கொடுத்தாலே மற்ற குழந்தைககளை போல அவர்களாலும் சாதிக்க முடியும்.