செய்திகள் உண்மை உடனுக்குடன்

மக்கள்நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு: தேமுதிக நிர்வாகி தற்கொலை முயற்சி

Dmdk fb

மக்கள்நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தற்கொலைக்கு முயன்ற அந்த கட்சி உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வார்டு செயலாளர் மணியன் என்பவர் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு‌ இன்று காலை வந்தார். திமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரம் மேற்கொள்ள முயன்ற அவரை, தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது மணியன் விஷம் அருந்த முயற்சித்தார், அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மணியனின் செயலால் ஆத்திரமடைந்த தேமுதிக தொண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

தாக்குதலில் இருந்து மணியனை மீட்ட காவல்துறையினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.