செய்திகள் உண்மை உடனுக்குடன்

தலைவர்களின் இன்றைய பரப்புரைத் திட்டம்

Vijay leaders combine

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சென்னையில் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் மற்ற தலைவர்கள் எந்தெந்த பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர் என்று பார்க்கலாம்.

தேமுதிக தலை‌வர் விஜ‌யகா‌‌ந்த் நெய்வேலி, பண்ருட்டி‌‌, ‌உளுந்தூர்பேட்டை பகு‌‌திக‌ளில் ‌‌பர‌ப்புரை செய்‌‌யவு‌ள்ளார். திமுக பொருளாளர் ஸ்டாலின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கையில் பரப்புரை மேற்கொள்கிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திண்டிவனம், திருப்போரூர் தொகுதிகளிலும், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் விழுப்புரம், திருக்கோயிலூர் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கவுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் திருவாரூர், தஞ்சாவூரிலும்‌ அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அ‌ன்புமணி காஞ்சிபுரம், செய்யாறு, செங்கல்பட்டிலும் பரப்புரை செய்யவுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவ‌ளவன் திருவள்ளூரிலும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆரணியிலும் வாக்கு சேகரிக்கவுள்ளனர். இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் திருச்சி, விரு‌‌த்தா‌சலத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.