செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஈவிகேஎஸ்.இளங்கோவனின் பி.ஏ.வாக செயல்படவில்லை: குஷ்பு விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு இன்று சந்தித்துப் பேசினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பாக நேற்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசிய குஷ்பு, அதன் தொடர்ச்சியாக சோனியா காந்தியை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள வளர்ச்சி குறித்து சோனியா காந்தியிடம் விவரித்ததாகக் கூறினார். ஈவிகேஎஸ் இளங்கோவனை மீண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, தாம் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை எனக் குறிப்பிட்டார்.