செய்திகள் உண்மை உடனுக்குடன்

சசிகலா புஷ்பா அதிவேக வளர்ச்சி அடுத்தடுத்த வீழ்ச்சி

அதிமுகவில் அதி வேக வளர்ச்சியில் இருந்த சசிகலாபுஷ்பா சர்ச்சையில் சிக்கி சறுக்கலை சந்தித்திருக்கிறார்.

சென்னையில் வசித்த வந்தபோதிலும் 2010ம் ஆண்டு நெல்லை மாவட்ட அதிமுக மகளிர் இணைச்செயலாளர் பொறுப்பு அவருக்கு கிடைத்தது. 2011ல் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வாய்ப்பை நூலிழையில் இழந்தாலும் அடுத்தடுத்து அரசியலில் வளர்ச்சியில் வேகமெடுத்தார்.

2011ல் ‌அதிமுக இளம்பெண்கள் பாறையின் துணைச் செயலாளர், அதே ஆண்டில் தூத்துக்குடி மேயர்,2013ல் அதிமுக மகளிர் அணி செயலாளர் என அடுத்தடுத்து பதவிகள் அவரை தேடிவந்தன. மேயர் பொறுப்பில் இருக்கும்போத 2014ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை பெற்று கட்சியில் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தார் சசிகலாபுஷ்பா.

ஆனால் இந்த அதிவேக வளர்ச்சி சமூகதளங்களில் வெளியான ஒரு சர்ச்சைக்குரிய ஆடியோவால் ஆட்டம்காணத் தொடங்கியது. கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட அவர் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்தபோது தான் திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் ‌இணைந்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியாகி சிக்கலை அதிகப்படுத்தியது.

மார்பிங் புகைப்படங்கள் என அவர் மறுத்ததால் ஒய்ந்திருந்த சர்ச்சை டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவுடன் நடந்த மோதலால் அதிமுகவில் மீண்டுஎழவே முடியாத அளவிற்கு சறுக்கலை அளித்துவிட்டது.