வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜி சாட்- 18 செயற்கைக் கோள்

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளான ஜி சாட்-18 ஃப்ரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு இச்செயற்கைக்கோள் ஏரியான் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. ஜிசாட் செயற்கைக் கோள் இந்தியாவின் தொலைத் தொடர்பு வசதிகளை அதிகரிக்க உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக எடையுள்ள இந்திய செயற்கைக்கோள்கள் தற்போது வெளிநாட்டு ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் ‌இது போன்ற செயற்கைக்கோள்களை இந்தியாவிலிருந்தே செலுத்த வசதியாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.