செய்திகள் உண்மை உடனுக்குடன்

ரூ.12 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ள வெஸ்பாவின் புதிய ஸ்கூட்டர்

Fotorcreated

பியாஜியோ நிறுவனத்தின் 130ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரூ.12 லட்சத்தில் வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி வகை ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய த்ரீ வீலர் மார்க்கெட்டில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள இத்தாலி நிறுவனமான பியாஜியோ, வெஸ்பா வகை ஸ்கூட்டர்கள் மூலம் டூவிலர் சந்தையில் , தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டது. இந்தநிலையில், பியாஜியோ நிறுவனம் தொடங்கி 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி வகை ஸ்கூட்டர்களை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது. லிமிட்டட் எடிஷனாக வெளிவந்துள்ள இந்த மாடல் ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் பைக்குக்கான அத்தனை வசதிகளையும் கொண்டுள்ள வெஸ்பா 946 மாடலுக்கு ரூ.12,04,970 (எக்ஸ் ஷோரூம் புனே) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரில்லா எஸ்ஆர்வி 850 ஏபிஎஸ் மாடலுக்குப் பிறகு இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்கூட்டராக இது அறியப்படுகிறது. ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எல்ஈடி புரஜெக்டர் ஹெட்லைட், எல்ஈடி இண்டிகேட்டர்ஸ் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ள வெஸ்பா 946 மாடல் 125 சிசி என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 1946ஆம் ஆண்டு வெளிவந்த வெஸ்பா ஸ்கூட்டர் மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த வெஸ்பா 946 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வெஸ்பா வகை ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, புதிய வகை வெஸ்பா ஸ்கூட்டர்களையும் பியாஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.