ரூ 11.499 க்கு லெனோவா K6 இந்தியாவில் அறிமுகம்..!

Lenovo-k6-note-k6-k6-power-

பல்வேறு சிறப்பம்சங்களுடன் லெனோவா K6 மாடல் இந்தியாவில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெனோவா K6 மொபைலின் சிறப்பம்சங்கள்...

* 5 இன்ச் வடிவத்தில் முழு எச்டி திறனுடன் 1,080x1,920 பிக்சல்கள் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இதுவரை இல்லாத அளவிற்கு 4000 மி. ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி தரத்துடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
* லெனோவா K6- ல் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷல்லோ ஒஸ், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப் 430 பிராசசர் இயங்குதளத்தில் மூலம் இயக்கப்படுகிறது.
* ஆட்டோ ஃபோகஸ் தொழிநுட்பத்துடன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா வசதியும், முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா வசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* லெனோவா K6 ஸ்மார்ட்போனில் சென்ஸார்ஸ் கைரேகை தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.
* டபுள் சிம் கார்டு பொருத்தும் வசதியுடன், 4G தொழில்நுட்பமும் அமைந்துள்ளது.
* வெள்ளி, தங்கம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் ரூ 11.499 விலைக்கு சந்தையில் களமிறங்கவுள்ளது.
* இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமெரியுடன் ஸ்மார்ட்டாக வெளிவரவுள்ளது.