செய்திகள் உண்மை உடனுக்குடன்

மடக்கும் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி எக்ஸ்1 ரிலீஸ் எப்போது?

Galaxy x1

மடக்கும் தன்மை கொண்ட சாம்சங் கேலக்ஸி எக்ஸ் 1 மாடல் ஸ்மார்ட் போன்கள் இந்தாண்டின் இரண்டாவது பாதியில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தென்கொரியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் இதற்காக உரிமம் (பேடண்ட்) பெற விண்ணப்பித்துள்ளது. கேல்க்ஸி எக்ஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. ப்ராஜெக்ட் வேலி (Project Vally) என்ற பெயரில் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. 

இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்று, கேலக்ஸி எக்ஸ் 1 ரக ஸ்மார்ட் போன்கள் இந்தாண்டுக்குள் வெளியாகும் என்று தென்கொரிய இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

சந்தையில் வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே உள்ள பிங்கர் பிரிண்ட் ரீடர் (Finger Print Reader) வசதியுடன் பேஸ் ரீடர் (Face reader) மற்றும் (Palm Reader) வசதிகளுடன் கேலக்ஸி எக்ஸ் 1 மாடலை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.