செய்திகள் உண்மை உடனுக்குடன்

5100 மி. ஆம்பியர் பேட்டரியுடன் புதிய லெனோவா பி2..!

Lenovo-p2

புத்தம் புது மாடல்களை தரமாக வழங்கி வரும் லெனோவா நிறுவனம் தற்போது லெனோவா பி2 மாடலை புத்தாண்டு வரவாக இந்திய சந்தையில் களமிரக்கியுள்ளது.

லெனோவா பி2 மாடலின் சிறப்பம்சங்கள்...

* இதுவரை இல்லாத அளவு 5100 மி. ஆம்பியர் பேட்டரி தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 1080x1920 பிக்சல்கள் திறன் கொண்ட 5.5 இன்ச் முழு எச்டி திரையுடன் வெளிவந்துள்ளது.
* எல்இடி ஃபிளாஷ் உடன் முன்பக்க கேமரா 5 மெகாபிக்சலும், பின்புறம் 13 மெகாபிக்சலும் கொண்டுள்ளது.
* 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு திறன் கொண்டது.

* லெனோவா பி2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ, அக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராசசர் மூலம் இயங்குகிறது.
* சென்சார் வசதியுடன் 177 கிராம் எடையுடைய பி2 மாடல் போன் கோல்ட், கிரே ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.
* இந்த லெனோவா பி2 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வருகிறது. அதாவது, 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகையிலும் மற்றும் 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகையிலும் கிடைக்கும்.

* 3ஜிபி ரேம் உடைய மாடல் ரூ. 16,999 க்கும், 4ஜிபி ரேம் உடைய மாடல் ரூ. 17,999 க்கும் இந்தியாவில் தற்போது கிடைக்கிறது.