கணினி மூலம் வாட்ஸ்அப் பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

Whatsapp

வாட்ஸ் அப் மற்றும் டெலகிராம் செயலிகளின் பயன்பாடுகளை கணினியில் இணைத்து பயன்படுத்தும் போது, ஹேக்கர்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேலைச் சேர்ந்த செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவன பொறியாளர்கள், வாட்ஸ் அப் மற்றும் டெலகிராம் செயலிகளின் பயன்பாடுகளை கணினியில் இணைத்து பயன்படுத்தும் போது, ஹேக்கர்கள் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடும் என்று கூறுகின்றனர். இந்த செயலிகளை கணினியில் இணைத்து பயன்படுத்தும் போது, மால்வேர்களை ஒரு புகைப்படம் வாயிலாகவோ அல்லது வீடியோ வாயிலாகவோ அனுப்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு மெசேஜின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னர், அதனை திறப்பது சிறந்தது என்றும் அவர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.