செய்திகள் உண்மை உடனுக்குடன்

மெக்டொனால்ட்ஸ் செயலியைப் பயன்படுத்துகிறீர்களா?: எச்சரிக்கை ரிப்போர்ட்

Mcdelivery

மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் இந்திய செயலியின் மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது.

மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் மெக்டெலிவரி செயலியிலிருந்து சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் செல்போன் எண், வீட்டு முகவரி, சமூக வலைதள கணக்குகள் குறித்த விவரங்கள் கசிந்திருப்பதாக இணையதள பாதுகாப்பு நிறுவனமான பாலிபல் (Fallible) தெரிவித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மேற்கிந்திய மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவன செயலி வேறு ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், இந்த தகவல்கள் கசிவு மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை.