செய்திகள் உண்மை உடனுக்குடன்

வந்தாச்சு நோட்பின் தளம்: இனி ஈஸியா எடுக்கலாம் நோட்ஸ்!

700x350-notepin

தேர்வு முடிவுகளின் காலம் இது. 10,11,12-ஆம் வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், மாணவர்களுக்கு தேர்வுகள் குறித்த அணுகுமுறைகள், பாடத்தை முழுமையாக உள்வாங்குவதற்கான குறிப்புகள் போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் படித்தவற்றை குறிப்புகளாக எடுத்து, மீண்டும் திரும்பிப் பார்க்கும் மாணவர்களுக்கு Notepin தளம் ஒரு பரிசு. மாணவர்களுக்கு மட்டுமல்ல, எந்த துறையைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியமான குறிப்புகள், தகவல்களை திரட்டி ஓரிடத்தில் வைக்க ஒரு எளிய தளமாக இருக்கிறது.

ஸ்மார்ட்ஃபோனிலேயே நோட்ஸ் எடுப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. இதுமட்டுமில்லாமல் விஷயங்களை குறித்து வைப்பதற்கும், அதை தேடி ஆப்ஸ்கள் வந்துவிட்டாலும், டெஸ்க்டாப், லேப்டாப் பயன்படுத்தும் அனைவருக்கும் இது ஆஹா விஷயம்தான். நோட்பின் தளத்தைப் பயன்படுத்தவும் குறிப்புகளை எழுதவும், சேமிக்கவும் அதில் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம்கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான நோட்டை உருவாக்கிக்கொள்ளலாம்.

முகப்புப் பக்கத்தில் தோன்றுவதை டைப் செய்தால் போதும். குறிப்பேட்டுக்கான இணைய முகவரி உருவாகிவிடும். அதைவைத்து, புதிய குறிப்பேட்டை உருவாக்கிக்கொள்ளலாம். மீண்டும் தேவை எனில் அதே முகவரியை டைப் செய்து குறிப்புகளை பார்க்கலாம். பழைய குறிப்புகளை எடிட் செய்யலாம்.

ஆடியோ நோட்ஸ்களை இணைப்பது, புதிய குறிப்புகளை சேர்ப்பது போன்ற வசதிகளை எளிதாகவும் செய்ய முடிகிறது.