செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜெர்மனியில் களைகட்டிய தமிழர்களின் காவடி ஆட்டம்

F a
F b
F c
F d
F 1
F 2
F 3
F 4

இந்துக்களின் பிரசித்திப்பெற்ற முருகன் வழிபாட்டு நிகழ்வான காவடி ஆட்டம் பல்லாயிரம் மைல்கள் கடந்து ஜெர்மனி நாட்டிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர். நம் ஊர்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாநாட்களில் பக்தர்கள் காவடியை தோளில் சுமந்து நையாண்டி மேளத்தின் இசைக்கேற்ப ஆட்டம் ஆடி முருகக் கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

ஜெர்மனியின் ஹாம் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் 18,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர். காவடியைத் தலையில் சுமந்தும், கழுத்தில் வைத்து சுழற்றியும், முதுகில் அழகுக் குத்தி காவடியை நகர்த்திச் சென்றும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர் துவாரஹா ஜெயக்குமாரன் கூறுகையில், விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர். காவடியை தோளில் சுமந்தும், அலகுக் குத்தியும், தலையில் தீச்சட்டி சுமந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் என்றார்.