தேசிய இளைஞர்கள் தினம் இன்று

Vivekananda fb

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் தேதி கோல்கத்தாவில் பிறந்தார். நமது நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் இளைஞர்கள் முன்னேற்றம் நமது நாட்டின் முன்னேற்றம் என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர். அவரது பிறந்த தினமே தேசிய இளைஞர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து அதிலிருந்து நற்செயல்கள் விளையும் என்று கூறியவர் விவேகானந்தர். நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன் என்றவர் விவேகானந்தர். இதிலிருந்தே அவர் இளைஞர்கள் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது.