செய்திகள் உண்மை உடனுக்குடன்

இன்று ஹேப்பி கிஸ் டே..!!

Kiss-day

உலக அளவில் இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு முத்தங்களைப் பறிமாறி மகிழும் தினம்.

பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.

காதலர்கள் மட்டுமின்றி, தாத்தா, பாட்டிகள் தங்களின் பேரன், பேத்திகளுக்கும், பெற்றோர் அவர்களின் குழந்தைகளுக்கும் என அனைவரும் முத்தத்தின் வாயிலாக இன்று தங்களின் அன்பை பரிமாறிகொள்கின்றனர். சிலர் அவர்களது செல்ல பிராணிகளுடன் கூட கிஸ் டேவை கொண்டாடி வருகின்றனர். உலகமே கொண்டாடும் இந்த நாளில் டுவிட்டரில் #KissDay என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டில் உள்ளது.