செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஆஸ்கர் விருது வெறும் கவர்ச்சி மட்டுமே: பா. ரஞ்சித்

Ranjith

ஆஸ்கர் விருதுகளில் அதிக கவர்ச்சி மட்டுமே இருப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

ஹாலிவுட் படங்களுக்காக, அந்த டெக்னீஷியன்களுக்காக கொடுக்கப்படும் விருதுதான் ஆஸ்கர். அந்த விருதின் மேல் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. அமெரிக்க ஆசையில், அதை நோக்கி நகர நினைக்கிற மனோபாவம் உள்ளவர்கள், ஆஸ்கர் விருது கிடைத்தால் பெருமை என்று நினைக்கிறார்கள். ஆனால், அதில் எனக்கு அதிக விமர்சனங்கள் உண்டு. இதில் அதிக கவர்ச்சி மட்டுமே இருப்பதாக நான் நம்புகிறேன். அதைவிட, வெனிஸ் விருது விழாவையும் பெர்லின் விருது விழாவையும் நான் சிறந்ததாகக் கருதுகிறேன். நமது ’விசாரணை’ படம் வெனிஸ் பட விழாவில் கலந்து கொண்டது அற்புதமான நிகழ்வு.