செய்திகள் உண்மை உடனுக்குடன்

கறுப்பினத்தவருக்கு கவுரவம் சேர்த்த ஆஸ்கர் விருதுகள்

Black actors

ஆஸ்கர் விருது சரித்திரத்தில் இதுவரை மூன்றுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் ஒரே வருடத்தில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கபட்டதில்லை.

கடந்த 63 ஆண்டு கால ஆஸ்கர் வரலாற்றில், இந்த வருடம் மட்டும் 6 கறுப்பினத்தவர்கள் ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். கறுப்பினச் சிக்கலை பின்னணியாகக் கொண்ட மூன்று திரைப்படங்களும் பரிந்துரைக்கப்பட்டன. கறுப்பினத்தவர்கள் ஆஸ்கர் விருதில் புறக்கணிக்கப்படுவதாக சென்ற வருடம் விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக வில் ஸ்மித் போன்றவர்கள் விழாவை புறக்கணித்தனர். அதே போன்று, கடந்த வருடம், ஆஸ்கர் விருதை கண்டிக்கும் விதத்தில் ‘ஆஸ்கர்சோவொயிட்’ என்ற ஹஷ்டேக் சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட்டானது. ஆனால் இந்த ஆண்டு கறுப்பினத்தவர்கள் ஆஸ்கரை வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆஸ்கரில் முதன்முறையாக இந்த வருடம் தான் நான்கு பிரிவிலும் கறுப்பினத்தை சார்ந்த நடிகை, நடிகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகை என்ற இரு பிரிவிலும் கறுப்பினத்தவரே விருதினை அள்ளிச் சென்றுள்ளனர். குறிப்பாக சிறந்த துணைநடிகை பிரிவில், இந்த ஆண்டு அதிகபட்சமாக 3 கறுப்பின நடிகைகள் பரிந்துரைக்கபட்டனர். இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு 2 கறுப்பினத்தவர்கள் துணை நடிகைகான பிரிவில் பரிந்துரைக்கபட்டனர்.

அதுமட்டுமின்றி, மூன் லைட், பென்சஸ், ஹிடன் ஃபிகர்ஸ் ஆகிய கறுப்பினத்தவர் பிரச்சனைகளை கூறும் மூன்று திரைப்படங்கள் சிறந்த திரைப்படம் என்ற விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. அதில் “மூன் லைட்” சிறந்த திரைப்படத்திற்கான விருதினை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது “பென்சஸ்” படத்தில் நடித்ததற்காக “வயோலா டேவிஸ்” க்கு வழங்கப்பட்டது. இதுவரை மூன்று முறை இவர் ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கபட்டவர். இந்த ஆண்டு விருதை தட்டி சென்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருது “மூன்லைட்” படத்தில் நடித்ததற்காக மஹேர்சலா அலிக்கு கிடைத்துள்ளது. இவர்கள் இருவருமே கறுப்பினத்தவர்.