செய்திகள் உண்மை உடனுக்குடன்

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

Indian team

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியாட்டத்தில் இந்திய அணி நாளை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழரை மணியளவில் தொடங்குகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி, ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற தெம்புடன் களமிறங்குகிறது. 20 ஓவர் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டேரன் சமி தலைமையில் களமிறங்குகிறது.

மேலும், கெய்ல், டுவைன் பிராவோ, ஆண்ட்ரே ரஸ்ஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான பயிற்சியாட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.