செய்திகள் உண்மை உடனுக்குடன்

குத்துச்சண்டை ஒலிம்பிக் வாய்ப்பு நெருங்குகிறது இந்தியா

அசர்பைஜானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் தேவேந்திரோ‌ லைஷ்ராம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மனோஜ் குமார், சுமீத் சங்க்வான் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

64 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றுள்ள மனோஜ்குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பல்கேரியாவின் இசமெட்டோவ் ஐரின்ஐ தோற்கடித்தார். 81 கிலோ எடைப்பிரிவில் ‌பங்கேற்றுள்ள சுமீத் சங்க்வான், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மங்கோலிய வீரர் சங்கட்சுரனை வீழ்த்தினார். காலிறுதியில் வெற்றி பெறும் பட்சத்தில் மனோஜ்குமார், சுமீத் சங்க்வான் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவர். இதேபோல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தேவேந்திரோ லைஷ்ராம், தென்னாப்பிரிக்க வீரரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் தேவேந்திரோ லைஷ்ராம் ஒலிம்பிக் போட்டிக்கு ‌தகுதிபெறுவார். 75 கிலோ எடைப்பிரிவில்‌ பங்கேற்றுள்ள விகாஸ் கிரிஷன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீரரை, விகாஸ் கிரிஷன் எளிதில் வீழ்த்தினார்.