செய்திகள் உண்மை உடனுக்குடன்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டி.... தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

Cricket fb

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அதனால் 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் ‌எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜான்சன் சார்லஸ் 43 ரன்கள் எடுக்க சக வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணியில், அமித் மிஸ்ரா 3 மூன்று விக்கெட்டுகளையும், முகமது சமி, அஸ்வின், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 144 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 2 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.