உலக பல்கலை. துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய விராங்கனை

Vinita

போலந்தில் நடந்த உலக பல்கலைக்கழக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனை, இந்திய வீராங்கனை தோற்கடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.

பைட்காஸ் நகரில் உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தன. இதில் சண்டிகரைச் சேர்ந்த 22 வயதான வினிதா பரத்வாஜ் கலந்துகொண்டார். இதன் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் நடந்த போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனையும், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான சீனாவின் யீ சில்லிங்-கைத் தோற்கடித்து அவர் தங்கம் வென்றார்.