செய்திகள் உண்மை உடனுக்குடன்

லண்டன் கிளாசிக் செஸ்... விஸ்வநாதன் ஆனந்த் டிரா

லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்று ஆட்டத்தை இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.

லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்றில், அமெரிக்காவின் சோ வெஸ்லே-வை எதிர்த்து ஆனந்த் விளையாடினார். 30ஆவது நகர்த்தலின்போது, போட்டியை டிரா செய்ய இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் தலா அரைப்புள்ளி வழங்கப்பட்டது. இதுவரை நடைபெற்றுள்ள 5 சுற்றுப் போட்டிகளின் முடிவில், சோ வெஸ்லே மூன்றரை புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், இரண்டரை புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். 10 முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள ‌லண்டன் கிளாசிக் செஸ் போட்டி, 9 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.