செய்திகள் உண்மை உடனுக்குடன்

’தோனி விலகியதாலேயே எனது மகனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது’.. யுவராஜ் தந்தை கருத்து

Yuvi fb

தோனி கேப்டனாக இல்லாததாலேயே தனது மகன் இந்திய அணியில் தேர்வாகியுள்ளதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்ம், உடற்தகுதி உள்ளிட்ட காரணங்களால் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் அவர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யுவராஜ்சிங்கின் தந்தை, தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதாலேயே, யுவராஜ் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு நடக்கும் என தான் எண்ணியதாகவும், தோனி கேப்டன் பதவியில் இல்லாத இந்த நேரத்தில் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.