செய்திகள் உண்மை உடனுக்குடன்

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்க விருப்பம்... அஷ்வின்

புத்தாண்டை வெற்றியுடன் தொடக்க விரும்பு‌வதாக இந்திய‌ கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் ட்வெண்டி ட்வெண்டி தொடரை முன்னிட்டு புனேவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்வின், சிறந்த ஆட்டத்திறனுடன் இருப்பதாக கருதுகிறேன் என கூறினார்.

மேலும் பேசிய அவர், வெள்ளை நிற பந்தை பயன்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. காற்றில் அவ்வளவாக சுழன்று செல்லாது. இதனால் கூடுதல் முயற்சிகளை கையிலெடுக்க வேண்டும். ஓவரை கட்டுக்கோப்பாக வீச வேண்டும். ஒரு ஓவரில் 5 ரன்களுக்கு மேல் எதிரணி எடுக்காத வகையில் பந்துவீச வேண்டும். முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆட்டத்தின் போக்கை சரியாக கணித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.