செய்திகள் உண்மை உடனுக்குடன்

ரஞ்சிக்கோப்பை... மும்பையின் ஆதிக்கத்தை தகர்த்த குஜராத்!

Parthiv

மும்பை அணியுடனான ரஞ்சிக்கோப்பை இறுதியாட்டத்தில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.

இந்தூரில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 90 ரன்களும், மன்பிரித் ஜுனேஜா 77 ரன்களும் எடுத்தனர்.