செய்திகள் உண்மை உடனுக்குடன்

’இந்திய அணியின் கேப்டனாவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை’.. விராத் கோலி ஓபன் டாக்

Kohli

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்றுவிதமான போட்டிகளிலும் தலைமை தாங்குவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி கடந்த 4ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த விராத் கோலியே, மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மனம்திறந்துள்ள விராத் கோலி, இந்திய அணியின் கேப்டனாகும் நாள் எனது வாழ்வில் வரும் என்று நான் எண்ணியதில்லை. முதன்முதலாக இந்திய அணிக்கு தேர்வானபோது ரன்குவிப்பில் ஈடுபட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே முதன்மையான இலக்காக இருந்தது. அணியின் வெற்றிக்காக எனது பங்களிப்பை அளிக்கவே முன்னுரிமை அளித்து வந்தேன். இந்திய அணியின் கேப்டனாக இருப்பது பெருமையளிக்கும் அதேநேரத்தில், எதிர்ப்புகள், பாராட்டுகள் என கலவையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று கோலி தெரிவித்தார்.