செய்திகள் உண்மை உடனுக்குடன்

பதக்கத்தை இழந்த ஜமைக்கா வீரர் மேல்முறையீடு

Jamai

ஊக்கமருந்து சோதனையில் சிக்கி ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரர் நெஸ்டா கார்டர் தம்மீதான நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

உசைன் போல்ட், நெஸ்டா கார்டர் அடங்கிய ஜமைக்க அணி 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தொடரோட்டத்தில் தங்கம் வென்றது. இதில் நெஸ்டர் கார்டர் ஊக்க மருந்து உட்கொண்டிருந்தது அன்மையில் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து ஜமைக்கா அணியினரிடமிருந்து தங்கப்பதக்கங்கள் திரும்ப பெறப்பட்டன. நெஸ்டா கார்டர் தம்மீது எந்த தவறும் இல்லை என விளையாட்டுப் போட்டிகளுக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ளார். மேலும் தம்மீதான நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.