விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் தமிழக அணி

Cric 700 x 350

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

டெல்லி பாலம் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழக அணி, குஜராத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 49.4 ஓவரில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆர்.ஹெச். பாட் 83 ரன்கள் எடுத்தார். தமிழக அணி சார்பில் வி.சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 212 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 42.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டுமே இழந்து 217 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தமிழக அணி தரப்பில் கங்காஸ்ரீதர் ராஜு 95 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.