பாக். ராணுவத்தில் இணைய விருப்பம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்

Samuels

பாகிஸ்தான் ராணுவத்தில் இணைய ஆர்வமாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் மர்லன் சாமுவேல்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் சமி தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணி சாம்பியன் பட்டத்தினை வென்றது. லீக் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த நிலையில், தொடரின் இறுதிப் போட்டி மட்டும் பாதுகாப்பு கெடுபிடிகளுடன் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது. போட்டி முடிந்த பின்னர் வீரர்களைச் சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஒமர் ஜாவேத் பஜ்வா, பெஷாவர் அணி வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். லாகூரில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற பாதுகாப்பு அளித்த ராணுவ தளபதிக்கு வாழ்த்து தெரிவித்த பெஷாவர் அணியில் இடம்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ், மனதளவில் தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார்.