செய்திகள் உண்மை உடனுக்குடன்

சூதாட்ட புகார்: பாகிஸ்தான் வீரருக்கு தடை

சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பானுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய பிஎஸ்எல் தொடரிலும் முகமது இர்பான் சூதாட்ட புகாரில் சிக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அந்த தொடரின்போது சூதாட்ட தரகர்கள் இர்பானை அணுகியதை உறுதி செய்தனர். சூதாட்ட தரகர்கள் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்திடம் புகார் எதையும் இர்பான் அளிக்காததால், அனைத்துவிதமான போட்டிகளிலும் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.