விராத் கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம்

Virat kohli

இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் மதிய நேர ஆட்டத்தின் போது விராத் கோலிக்கு வலது தோள் பட்டையில் காயம் எற்பட்டது. இதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறனார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி ராஞ்சியில் நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹண்ட்ஸ்கோம் அடித்த பந்து பௌண்டரிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்த முயற்சி செய்து தாவியபோது கீழே விழுந்தார் இந்திய கேப்டன் விராத் கோலி. இதையடுத்து, மிகுந்த வலியுடன் காணப்பட்ட கோலி உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியே சென்றார்.

அவர் வரும் வரையில் ரஹானே கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி 186 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.