இந்திய பந்துவீச்சாளர்களைச் சோதித்த ஆஸி.: முதல்நாளில் 299 ரன்கள் குவிப்பு

ராஞ்சியில் நடைபெறும் இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்தி‌ரலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 19 ரன்களிலும், ரென்ஷா 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷான் மார்ஷ் 2 ரன்னிலும், ஹேண்ட்ஸ்கோம்ப் 19 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்த கேப்டன் ஸ்மித்தும், மேக்ஸ்வெல்லும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 19-வது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்தும் அவர் சாதித்தார். முதல் நாள் முடிவில் ஸ்மித் 117 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.