மேக்ஸ்வெல்லின் விநோத சாதனை

Maxwellqq

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக 100 பந்துகளை எதிர்கொண்டார்.

இந்திய அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவர் இதனை சாதித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 36 டி20 போட்டிகள், 74 ஒருநாள் போட்டிகளில் மேக்ஸ்வெல் விளையாடியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மேக்ஸ்வெல், இந்த போட்டியிலேயே முதல்முறையாக நூறு பந்துகளை எதிர்கொண்டார். இதற்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் 98 பந்துகளை எதிர்கொண்டதே அவர் எதிர்கொண்ட அதிக பந்துகள் வரிசையில் முதலிடத்தில் இருந்தது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மித் 117 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதில் மேக்ஸ்வெல் 147 பந்துகள் எதிர்கொண்டார்.