விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் தமிழக அணி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில், தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டெல்லியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பரோடா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்களான தேவ்தர் 46 ரன்களும், வாஹ்மோட் 45 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 220 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, தமிழக அணி 48-வது ஓவரில் எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தினேஷ் கார்த்திக் 77 ரன்களும், கேப்டன் விஜய் ஷங்கர் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் சேர்த்தனர்.