செய்திகள் உண்மை உடனுக்குடன்

செரினா கர்ப்பம் கன்பார்ம்தானாம்

Sernena l

கடந்த சில மாதங்களாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருந்த அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளார்.

கண்ணாடியின் முன் நின்று தாமே எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள செரினா, அதில் 20 வாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார். செரினா கர்ப்பமடைந்திருப்பதை அவரின் செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.

35 வயதான செரினா வில்லியம்ஸ், ரெட்டிட் நிறுவனத்தின் துணை இயக்குனர் அலெஸ்சிஸ் ஒஹானியனை கடந்த டிசம்பர் மாதம் நிச்சயம் செய்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் இவர்கள் உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்ட செரீனா இப்போது கர்ப்பமாக உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.

பல்வேறு போட்டிகளில் 23 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள செரினா கர்ப்பமாக இருப்பதால் 2018 ஏப்ரல் மாதம் வரை விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.