செய்திகள் உண்மை உடனுக்குடன்

பைனலுக்கு வருவது யார்? கொல்கத்தா, மும்பை இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தாவும், மும்பை அணியும் மோதுகின்றன.

பத்தாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புனே அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் ஹைதாராத்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் கொல்கத்தா வெற்றிபெற்றது. 2-வது தகுதி சுற்று போட்டி இன்று நடக்கிறது. இதில் கொல்கத்தா-மும்பை அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு எட்டு மணிக்குத் தொடங்குகிறது. இந்தப்போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும். லீக் சுற்றின் இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணியை வீழ்த்தி‌யுள்ள உத்வேகத்துடன் மும்பை அணி களமிறங்குகிறது. லீக் சுற்றில் வாங்கிய தோல்விக‌ளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் கொல்கத்தா அணி, பலப்பரீட்சைக்கு தயாராக உள்ளது.