விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிப்பு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டிருந்த விவசாயிகள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பை விவசாயிகள் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக விவசாயி பாலனை தாக்கிய காவல் துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும், தாக்கப்பட்டவருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ‌வலியுறுத்தி விவசாயிகள் நேற்று முதல் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்