செய்திகள் உண்மை உடனுக்குடன்

விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

Vijayakanth action

விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாக தமிழகம் இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு முறையாகச் செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார் விவசாயி பாலன் மீதான தாக்குதல், விவசாயி அழகர் தற்கொலை ஆகிய சம்பவங்கள் மக்கள் மனதில் தமிழக அரசுக்கு மீதான எதிர்ப்புணர்வை விதைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்குத் தேவையான கடன்களை அரசு முறையாக வழங்கியிருந்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும், அவர்கள் மீதான தாக்குதலையும் தடுத்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார் விவசாயிகள் மீது கெடுபிடி காட்டும் நிதி நிறுவனங்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.