காமராஜரின் 114வது பிறந்தநாள்... அமைச்சர்கள் மலர்த்தூவி ‌மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரின் திரு உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜு, பெஞ்சமின்,மேயர் சைதை துரைசாமி‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.