திருமாவளவன் மீது பெண்கள் அமைப்பினர் காவல் ஆணையரிடம் புகார்

Thirumavalavanfb

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவதூறான கருத்துக்களை பரப்பி வரும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெண்கள் அமைப்பினர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி வேப்பேரியில் உள்ள மாநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் மனுவை அளித்தார். அதில், சுவாதி கொலை வழக்கு குறித்து அவதூறு பரப்பும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் அமைதியை கருத்தில் கொண்டு மதப்பிரிவினை வாத குற்றங்களையும் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களையும் தூண்டி வரும் திருமாவளவன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தி உள்ளார்.