மத்திய அரசு நிகழ்ச்சியில் தூங்கிய ரயில்வே அதிகாரி

ராமேஸ்வரம் முதல் மானாமதுரை வரையிலான பசுமை வழித்தட சேவை துவக்க விழாவில் ரயில்வே உயரதிகாரி உறங்கியது பொதுமக்களை அதிர்ச்சியடையச்செய்தது.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் விழா மேடையில் அமர்ந்திருந்த தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்க் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். இதனை பார்த்த சக அதிகாரிகள் யார் அவரை எழுப்புவது என தர்மசங்கடத்தில் இருந்தனர். ஒரு சில பத்திரிகை ஒளிப்பதிவாளர்கள் அவரை படம் பிடிக்க, அதிகாரி ஒருவர் அவர் தூக்கத்தை கலைத்தார். ஆனால் மீண்டும் அவர் உறக்கத்தில் ஆழ்ந்தார். மேலும் ஒருவர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.